வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்

சரவணம்பட்டி பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2022-10-07 18:45 GMT


போலி வாக்காளர்களை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதையடுத்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் அங்கன் வாடி ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

அந்த விண்ணப்பத்தில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அட்டை எண்ணை பூர்த்தி செய்து கொடுத்தால் செல்போனில் ஆன்லைன் செயலி மூலம் ஆதார், வாக்காளர் அடையாள எண்ணை இணைத்து விடுகின்றனர். இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்