பெண்கள் பால்குட ஊர்வலம்

கோவில்பட்டியில் சிவராத்திரியையொட்டி பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-02-18 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மாதாங்கோவில் ரோடு குருநாதர் சமேத அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 8 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் இருந்து ஏராளமான பெண்கள் மஞ்சள் பால்குடம் எடுத்து, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு பால்குடம் திருவீதிஉலா நடந்தது. தொடர்ந்து இரவில் முதல், 2-ம், 3-ம், 4-ம் கால சிறப்பு அபிேஷக பூஜை, அலகு நிறுத்துதல் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள் ஊஞ்சல் உற்சவமும், இரவு 8 மணிக்கு வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 11 மணிக்கு வீரபத்திர சுவாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

கோவில்பட்டி அருகே உள்ள குறுமலை மீனாட்சி அம்மை சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் சிவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இரவில் பல்வேறு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்