மகளிர்குழு தலைவியின் சகோதரருக்கு கத்திக்குத்து

மயிலாடுதுறையில் கடன் தவணையை கேட்ட மகளிர்குழு தலைவியின் சகோதரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-15 19:00 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் கடன் தவணையை கேட்ட மகளிர்குழு தலைவியின் சகோதரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடன் தொகையை கேட்டார்

மயிலாடுதுறை ரயிலடி மாப்படுகை சாலை வேதம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் அழகர். இவருைடய மனைவி லட்சுமி (வயது36). மகளிர் குழு தலைவியான இவர், அதே பகுதியில் உள்ள ரவி என்பவரது வீட்டுக்கு சென்று அவரது மனைவி பெற்ற கடன் நிலுவைத் தொகையை கேட்டார். இதனால் ரவி, அவரது மகன் விஷ்வா (19) ஆகிய 2 பேரும் லட்சுமியை திட்டினர்.

கைது

இதை லட்சுமியின் சகோதரர் மணிவண்ணன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா, ரவி ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிவண்ணனை அடித்து தாக்கியுள்ளனர். மேலும் விஷ்வா தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து மணிவண்ணனை குத்தியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த மணிவண்ணன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசாா் வழக்குப்பதிவு செய்து விஷ்வாவை கைது செய்தனர். மேலும் ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்