மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப்பதிவு முகாம்

நீடூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-24 18:45 GMT


நீடூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். 

மகளிர் உரிமைத்தொகை

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 170 குடும்ப அட்டைகளும், 413 ரேஷன் கடைகளும் உள்ளன. இந்த முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் முதல் கட்டமாக 211 முகாம்கள் இன்று(அதாவது நேற்று) முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருகை சீட்டுடன் கூடிய விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் நடைபெறும் இடத்தில் 3 தன்னார்வலர்கள் இருப்பார்கள். 5 முகாம்களை கண்காணிக்க 1 கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு அலுவலர்கள்

15 முகாம்களை கண்காணிக்க மாவட்ட அளவில் 1 கண்காணிப்பு அலுவலரும், அனைத்து அலுவலர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமினை சிறப்பாக நடத்த 3 கட்டமாக பயிற்சி அளித்துள்ளோம். அனைத்து முகாம்களிலும் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட்டுள்ள 211 முகாம்களில் 413 முகாம் அலுவலர்கள், 726 இல்லம் தேடி கல்விதிட்ட தன்னார்வலர்கள், 726 உதவி மைய தன்னார்வலர்கள், 83 மண்டல அலுவலர்களும், 27 கண்காணிப்பு அலுவலர்களும், 4 மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்முகாம்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

ஆய்வு

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை தாலுகா, கங்கணம்புத்தூர், வில்லியநல்லூர், சீர்காழி தாலுகா, விளந்திடசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் முகாமிற்கு வருகை தந்த விண்ணப்பதாரர்களுடன் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு முகாம் குறித்து மாவட்ட கலெக்டர் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), தாசில்தார்கள் மகேந்திரன், செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்