மகளிர் தின கருத்தரங்கம்

பாவூர்சத்திரத்தில் மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது.;

Update: 2023-03-13 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொறுப்பாளர் சொர்ணம் தலைமை தாங்கினார். பீடி சங்க ஒன்றிய செயலாளர் கற்பகவல்லி, விவசாய தொழிலாளர் சங்கம் சின்னத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் தலைவி சீ.காவேரி சீனித்துரை, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா ஆகியோர் பேசினர். இதில் குலசேகரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துமாலையம்மாள், யூனியன் கவுன்சிலர் ராஜேஸ்வரி, தங்கம், தர்மகனி, ஆரியமுல்லை, கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சசிகலா வரவேற்றார். சரஸ்வதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்