பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

திருவாரூர் அருகே படைவெட்டி மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்தினர்.;

Update: 2023-08-18 18:45 GMT

திருவாரூர் அருகே சேந்தனாங்குடி கிராமத்தில் படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வருகிற 21-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், கணபதி பூஜையுடன் நேற்று தொடங்கியது. முன்னதாக சேந்தனாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குடமுழுக்கு சிறப்பாக நடக்கவும், சீரான மழை பெய்து நெற்பயிர்கள் செழிப்பாக வளர வேண்டியும் முளைபாரி எடுத்து வழிபாடு நடத்தினர். முன்னதாக அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று படைவெட்டி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்