மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தலாம் - கலெக்டர் அழைப்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update: 2022-08-19 08:18 GMT

2022-23 ஆம் ஆண்டு மண்டல அளவிலான மதி சாராஸ் மேளா, அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி வருகிற 25-ந்தேதி முதல் 7.9.2022 வரை சென்னை அண்ணா சாலை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இதில் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 3 அரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், இதில் காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து சிறப்பு வாய்ந்த மற்றும் தரமுள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திடலாம்.

இந்த கண்காட்சியில் பங்குபெற விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் காஞ்சீபுரம் மாவட்ட மகளிர் திட்ட மேம்பாட்டு அலுவலகத்தில் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மாதிரி, குழுவின் தீர்மான புத்தகம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றுடன் நாளை (வியாழக்கிழமை)-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்