டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்

கருமத்தம்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-15 18:45 GMT

கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு பகுதியில் சோமனூர்-காரணம்பேட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை திறக்க பணிகள் நடைபெற்றது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்