பெண் காவலர்கள் பொன்விழா கொண்டாட்டம்

திருப்பத்தூரில் பெண் காவலர்கள் பொன்விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-03-17 18:31 GMT

1973-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் முதன் முதலாக தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் காவலர்கள் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கேக் வெட்டி மகளிர் காவலர்களுக்கு வழங்கி, சிறப்பாக பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி பேசினார்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பி.கணேஷ், வி.இ.செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பிரேமா, அன்பரசி, ஹேமாவதி, லதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்