ராமேஸ்வரம் மீனவ பெண் கொலை வழக்கு: நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்க்கு ஊர்வலமாக வந்த பெண்கள்

ராமேஸ்வரம் மீனவ பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்க்கு மனு கொடுக்க பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.

Update: 2022-07-04 07:51 GMT

ராமநாதபுரம்:

ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் இருந்து பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை கடந்த மே மாதம் வட மாநில இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இதுகுறித்து வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே வடமாநில இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்தினர் இன்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஊர்வலமாக. வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்