108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பெற்றாா்.;

Update: 2023-04-16 22:26 GMT

நம்பியூர்

நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவருடைய மனைவி தாரணி (வயது 23). இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மலையப்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தனர்.

கரும்புக்காடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது தாரணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் டிரைவர் சன உல்லா 108 ஆம்புலன்சை ரோட்டோரமாக நிறுத்தினார். பின்னர் தாரணிக்கு ஆம்புலன்சில் இருந்த மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பிரசவம் பார்த்தார்.

அப்போது தாரணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து தாயும், சேயும் பத்திரமாக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்