வேப்பிலையுடன் நடனமாடிய பெண்கள்

வேப்பிலையுடன் பெண்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.;

Update:2023-07-09 00:11 IST

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள பென்னகோணம் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (100 நாள் வேலை) கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு வேலை செய்த சில பெண்கள் வேப்பிலையை கையில் வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்