காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-07 19:51 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தாமிரபரணி மற்றும் வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை வெயிலால் ஆற்று படுகைகள் வறண்டு வருவதால் நீர்வரத்து குறைவதுடன் நீரின் தன்மையும் மாறுபட்டு உள்ளது. இதனால் நகராட்சி மூலம் வார்டு பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சுவையும் உப்பு தன்மையுடன் வருவதாக திருநகரத்தை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் விருதுநகர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் மற்றும் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

வரும் காலங்களில் கூடுதல் தண்ணீர் கிடைக்கப்பெற்றவுடன் குடிநீர் வினியோகம் சீராகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீரை சுத்திகரித்து வழங்குவதற்கான பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்