மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கும்பகோணம்;
மின் கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் எம்.ராஜலஷ்மி, க.கண்ணகி, கே.ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டு மின் கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.