பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவை கோர்ட்டு முன்பு பெண் வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவை கோர்ட்டு முன்பு பெண் வக்கீல்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவர் பிரியா தலைமை தாங்கினார். செயலாளர் மணிமேகலை, துணை தலைவர் நிர்மலா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் துணை செயலாளர் கீதாஞ்சலி, பொருளாளர் சூரியபிரபா மற்றும் பெண் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.