கலவை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

கலவை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலி

Update: 2023-03-17 18:45 GMT

கோட்டூர் அருகே கலவை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கலவை எந்திரத்தில் சிக்கினார்

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின். இவர், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கீழப்பனையூர் கிராமத்தில் 'பேவர் பிளாக்' (தரையில் பதிக்கும் கற்கள்)தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இங்கு கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி வனிதா(வயது 43) என்பவர் வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் வனிதா கலவை எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கலவை எந்திரத்தில் சிக்கிக்கொண்டார்.

பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்த வனிதாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு வனிதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலவை எந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்