விஷம் தின்று பெண் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-08 20:11 GMT

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூட நாணல் தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன். இவருடைய மனைவி அமிர்தவள்ளி (வயது 30) இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த அமிர்தவள்ளி வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீடடு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அமிர்தவள்ளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்