கொசுவர்த்தி ஏற்றும்போது புடவையில் தீப்பிடித்து பெண் படுகாயம்

கொசுவர்த்தி ஏற்றும்போது புடவையில் தீப்பிடித்து பெண் படுகாயமடைந்தார்.;

Update: 2023-10-19 13:45 GMT

கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகே உள்ள ராமன் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 35). பெயிண்டர். இவரது மனைவி வைஷாலி (26) நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சரண்ராஜ் பெயிண்ட் அடிப்பதற்காக வீட்டில் எளிதில் தீ பற்ற கூடிய திரவ பொருட்களை வைத்திருந்தார். வைசாலியின் புடைவையில் பெயிண்ட் அடிக்க வைத்திருந்த எளிதில் தீ பற்ற கூறிய திரவம் கொண்டியதாக தெரிகிறது. இதை கவனிக்காத அவர் தூக்கத்தில் எழுந்து கொசுவர்த்தியை ஏற்றினார். அப்போது திடீரென அவரது புடவையில் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார். இதைக் தூங்கிக்கொண்டிருந்த அவரது கணவர் சரண்ராஜ் உடனடியாக தீயை அணைத்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவம் குறித்து சரண்ராஜ் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்