சாராயம் விற்ற பெண் கைது
சேஷசமுத்திரம் பகுதியில் சாராயம் விற்ற பெண் கைது;
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள்(வயது 35) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.