சாராயம் விற்ற பெண் கைது

மயிலாடுதுறையில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-11 18:45 GMT
மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை நடப்பதாகவும், இதை தடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சேந்தங்குடி பகுதியில் தீவிர சாராய ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டனர். இதில். சேந்தங்குடி காவிரி கரையோரமுள்ள சுடுகாட்டில் சாராய விற்பனையில் ஈடுபட்ட சேந்தங்குடி செட்டித்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி திலகவதி (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தில் விஷ நெடி வீசியது. இதை தொடர்ந்து அந்த சாராயத்தில் 750 மில்லி மாதிரி எடுத்து அதனை தஞ்சை பகுப்பாய்வு கூட அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்