பீளமேடு
திருப்பூர் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் ரமணி (வயது 56). இவர் பீளமேட் டில் உள்ள தனது சகோதரியை பார்ப்பதற்காக திருப்பூரில் இருந்து தனியார் பஸ்சில் கோவை பீளமேடு பன்மால் பஸ்நிறுத்தத்தில் வந்து கீழே இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலி காண வில்லை. அதை பஸ்சில் வந்த போது மர்ம நபர் திருடியது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.