பெண் மாயம்

பெண் மாயம் ஆனார்.;

Update: 2023-03-11 18:46 GMT

தோகைமலை அருகே உள்ள நாச்சியார்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியின் மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பஞ்சு மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பிரியதர்ஷினியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்