உளுந்தூர்பேட்டை அருகேபசுமாடு உதைத்ததில் பெண் பலி

உளுந்தூர்பேட்டை அருகே பசுமாடு உதைத்ததில் பெண் பலியானாா்.

Update: 2023-04-07 18:45 GMT


உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). சம்பவத்தன்று இவர் வீட்டில் வளர்த்து வந்த பசுமாட்டிடம் பால் கறக்க சென்றார்.

அப்போது திடீரென அந்த பசுமாடு அவரை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்