கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் பலி
கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். .
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். .
துக்க வீட்டுக்கு சென்றார்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவரது மனைவி கமலவேணி (வயது 54) இவரது உறவினர் கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டிக்காபாளையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார். துக்க நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கமலவேணி நேற்று மதியம் பொள்ளாச்சியில் இருந்து தனியார் பஸ்ஸில் தாமரை குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நான்கு வழி சாலையை கடக்க முயன்றார். அப் போது பொள்ளாச்சியில் இருந்து அதிவேகமாக வந்த கார் கமலவேணி மீது பலமாக மோதியது.
கார் ஓட்டுனர்மீது வழக்கு
இதில் படுகாயம் அடைந்த கமலவேணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கமலவேணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த பொள்ளாச்சியை சேர்ந்த விசாகரத்தினம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.