மின்னல் தாக்கி பெண் பலி
கந்தர்வகோட்டை அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். பசுமாடும் செத்தது.
மின்னல் தாக்கி பெண் பலி
கந்தர்வகோட்டை அருகே மனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கோகிலா (வயது 42). இவர் நேற்று தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு ஓட்டி சென்றார். மதியம் 3 மணி அளவில் பலத்த இடி சத்தத்துடன் மின்னல் விழுந்தது.
அப்ேபாது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோகிலாவையும், அவரது பசு மாட்டையும் மின்னல் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசுமாடும் செத்தது. இதையறிந்த ெஜகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகிலாவின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த கோகிலாவுக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கந்தர்வகோட்டை அருகே மின்னல் தாக்கி பெண், பசுமாடு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சின்னத்துரை எம்.எல்.ஏ. சென்று கோகிலாவின் உடலை பார்த்து, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.