மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-05-18 18:22 GMT

கரூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 28). இந்த தம்பதி சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பழைய ஜெயங்கொண்டம்- லட்சுமணம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த சரஸ்வதி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்