ரூ.4.92 லட்சம் நகை, பணத்துடன் பெண் மாயம்
சங்கரன்கோவில் அருகே ரூ.4.92 லட்சம் நகை, பணத்துடன் பெண் மாயமானார்.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் மனைவி மருதாத்தாள் (வயது 60). இவருடைய மகள் மகேஷ் (33). இவர் திருமணம் ஆகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சீவலராயனேந்தலில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் ரூ.4 லட்சம் மதிப்பிலான 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ.92 ஆயிரத்துடன் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மருதாத்தாள் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை தேடி வருகிறார்கள்.