கடலில் மூழ்கி பெண் பலி

சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி பெண் பலியானாா்.

Update: 2023-05-15 18:45 GMT

சிதம்பரம்:

கடலூர் பச்சையாங்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி கார்த்திகா(வயது 32), இந்த தம்பதியினர், தனது மகன் ஹரிஹரன், மகள் கீர்த்தனா ஆகியோருடன் சாமியார்பேட்டை கடலில் குளித்தனர். அப்போது ஆக்ரோஷமாக எழுந்தஅலை கார்த்திகாவை இழுத்துச்சென்றது. இதில் கடலில் மூழ்கி, மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்