ஆற்றில் மூழ்கடித்து பெண் கொலை வாலிபர் கைது

ஆற்றில் மூழ்கடித்து பெண் கொலை வாலிபர் கைது

Update: 2022-05-30 17:07 GMT

கொலை

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள கூழையனூர் ஆற்றில் கடந்த 15-ந் தேதி ஒரு பெண் பிணம் மிதந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண் ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது‌. இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டவர் தேனி புதிய பஸ்நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வந்த வீரபாண்டி அருகே உள்ள தாடிசேரியை சேர்ந்த முருகேஸ்வரி(வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் வீசாரணையை தீவிரப்படுத்தினர்.

கைது

இதில் உப்புக்கோட்டை அருகே உள்ள பாலப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ராஜதுரை (வயது 22) என்பவர் முருகேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் இன்று கைது செய்தனர். போலீசில் அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் தேனி புதிய பஸ் நிலையம் அருகே ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்தேன். அங்கு தாடிசேரியை சேர்ந்த முருகேஸ்வரி பூ வியாபாரம் செய்து வந்தார். அவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கள்ளத்தொடர்பு

இந்தநிலையில் எனக்கும் முருகேஸ்வரிக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு என்னிடம் வற்புறுத்தினார். ஆனால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி வீரபாண்டியில் நடந்த கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு முருகேஸ்வரியை அழைத்து சென்றேன். அங்கு இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினோம். அப்போதும் முருகேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதைத்தொடர்ந்து கோட்டூர் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்கலாம் என்று முருகேஸ்வரிைய நான் அழைத்து சென்றேன். அப்போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் முருகேஸ்வரியை ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்