ஊருணியில் மூழ்கி பெண் பலி

ஊருணியில் மூழ்கி பெண் பலி

Update: 2023-09-06 18:35 GMT


ராமநாதபுரம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மேகலா தேவி (வயது 55). திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில் கணவரை பிரிந்து அண்ணன் திவாகரன் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்து மாயமான அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில் ராமநாதபுரம் நீலகண்டி ஊருணியில் மேகலாதேவி பிணமாக மிதந்துள்ளார். குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்