விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அம்பலவர் கட்டளை தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி தமிழ் இலக்கியா(வயது 34). இவர் கடந்த 9-ந் தேதி இரவு தனது வீட்டிலிருந்து வெளியே சென்றபோது, அவரது காலில் விஷஜந்து கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தமிழ் இலக்கியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை பாம்பு கடித்துள்ளதாக கூறியுள்ளனர். பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் தமிழ் இலக்கியாவின் தந்தை அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.