மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
பழனி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டுரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 29). இவருடைய மனைவி பிரியா (26).நேற்று இரவு ராம்குமார்-பிரியா தம்பதி பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொழுமம் வழியாக பழனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். நெய்க்காரப்பட்டி அருகே கரடிக்கூட்டம் பகுதியில் சாலையில் இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியபோது நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்ததில் பிரியா படுகாயம் அடைந்தார். ராம்குமாருக்கு காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.