சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு (வயது 68). இவர் சம்பவத்தன்று காலை கன்று குட்டியை வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து விழுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை, பட்டு தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.