கணவர் காலால் எட்டி உதைத்ததில் கரு கலைந்து பெண் உயிரிழப்பு...!

விழுப்புரத்தில் கணவர் காலால் எட்டி உதைத்ததில் கரு கலைந்து பெண் உயிரிழந்தார்.;

Update: 2022-12-30 02:53 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன் (வயது30). இவரது மனவைி பாரதி (23). இவர் ஏற்கனவே திருமணமானவர். பாரதியின் முதல் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். முதல் கணவர் மூலம் பாரதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், பாரதி தற்போது 4 மாத கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. செல்வபாண்டியனுக்கு பாரதி நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் பாரதியின் கர்ப்பத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி தகராறு செய்ததுடன் கருவை கலைத்து விடும்படி செல்வபாண்டியன் கூறியுள்ளார். ஆனால் பாரதி கருவை கலைக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வபாண்டியன் பாரதியை கீழே தள்ளி அவரது அடிவயிற்றில் காலால் எட்டி உதைத்து கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதில் பாரதிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாரதி அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வபாண்டியனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்