கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் சிசிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-04-25 06:56 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த அண்ணாமலைச்சேரியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 50). இவர் கோழி கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பஜாருக்கு தனது மனைவி அபிதா பீவி (44) உடன் ஆட்டோவில் வந்தார். அங்கு விற்பனைக்காக கோழிகளை வாங்கி கொண்டு ஆட்டோவை கும்மிடிப்பூண்டியில் இருந்து அண்ணாமலைச்சேரி நோக்கி ஜாகீர் உசேன் ஓட்டிச் சென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதிலம்பேடு அருகே செல்லும் போது அபிதா பீவி திடீரென ஆட்டோவில் இருந்து மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிதா பீவி பரிதாமாக உயிரிழந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பூவலம்பேடு எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்தவர் பார்த்திபன் (52). இவரது மகள் நாகராணி (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 10-ந் தேதி வீட்டின் வாசலில் உள்ள விறகு அடுப்பில் நாகராணி சமையல்செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீப்பற்றியது.

அக்கம்பக்கத்தின் நாகராணியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்