தூக்க மாத்திரைகள் தின்று பெண் சாவு

Update: 2023-04-16 19:30 GMT

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த பாகல்பட்டி ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பத்மபிரியா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கணவர் சேகர் சம்பளத்தை வாங்கி தன்னிடம் தரவில்லை என வேதனை அடைந்த பத்மபிரியா, வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பத்மபிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்