லாரி மோதி பெண் சாவு

பூதலூர் அருகே லாரி மோதி பெண் உயிரிழந்தார்;

Update: 2022-07-03 20:49 GMT
பூதலூர் அருகே உள்ள மாதுரான் புதுக்கோட்டை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மனைவி கித்தரி அம்மாள்(வயது 59). கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் மாதுரான் புதுக்கோட்டை பஸ் நிறுத்தம் வந்தனர். அந்தோணிசாமி அங்குள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது கித்தரி அம்மாள் சாலையை கடக்க முயன்றபோது செங்கிப்பட்டியில் இருந்து பூதலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கித்திரி அம்மாள் மீது மோதியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கித்தரி அம்மாள் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.






Tags:    

மேலும் செய்திகள்