பஸ் மோதி பெண் பலி

திண்டிவனம் அருகே பஸ் மோதி பெண் பலியானாா்.

Update: 2022-08-03 16:48 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி பத்மினி(வயது 60). இவர் நேற்று  மாலை தீவனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் பத்மினி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்