மதுரை ஒத்தக்கடை சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தில்லைக்கரசன். இவருடைய மனைவி சுந்தரி (வயது 39). இவர் மதுரை நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிமுடித்து விட்டு, தன்னுடைய மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேலூர் மெயின்ரோடு உத்தங்குடி அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ், சுந்தரி சென்ற மொபட் மீது மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.