காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-02-09 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

காட்டெருமை தாக்கியது

கோத்தகிரி அருகே உள்ள உல்லத்தட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணியக்கா(வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் மணியக்கா நேற்று காலை தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டெருமை ஒன்று திடீரென மணியக்காவை தனது கொம்புகளால் முட்டி தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

சிகிச்சை

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். தொடர்ந்து காட்டெருமையை விரட்டிவிட்டு படுகாயமடைந்த மணியக்காவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டெருமை தாக்குதலில் படுகாயமடைந்த மணியக்காவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்