தீக்குளித்து பெண் தற்கொலை

திருவண்ணாமலையில் தீக்குளித்து பெண் தற்கொலை ெசய்து கொண்டார்.;

Update: 2023-04-23 16:20 GMT

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமுதா (வயது 32).

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி பார்த்திபன் குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது குழந்தைகளை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பார்த்திபனிடம் அமுதா கேட்ட போது எந்தவித பதிலும் சொல்லாமல் அவர் வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த அமுதா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்