தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அரிமளம்:
அரிமளம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி விஜயா (வயது 42). இவரது மகள், அவரது கணவருடன் கோபித்துக்கொண்டு அரிமளம் காமராஜபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கணவன் வீட்டிற்கு சென்று வாழும்படி தனது மகளை விஜயா வற்புறுத்தி உள்ளார். ஆனால் விஜயா மகள் அதற்கு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.