பெண் விஷம் குடித்து தற்கொலை
ஆலங்குளத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ராஜீவ்நகரில் டீக்கடை நடத்தி வருபவர் ரமேஷ் என்ற ஜோசப் சாமுவேல். இவரது மனைவி ராணி என்ற இசக்கியம்மாள் (வயது 40). கணவருக்கு உதவியாக டீக்கடையில் ராணி வேலை செய்து வந்தார். ரமேஷூக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டீக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த ராணி திடீரென மயக்க மடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் பார்த்தபோது அவர் சாணிப்பொடியை (விஷம்) கலக்கி குடித்தது தெரியவந்தது.
உடனே அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.