பெண் விஷம் குடித்து தற்கொலை
நெல்லை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
பேட்டை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி கோமதிநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாலசுந்தரி (வயது 39). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலசுந்தரி பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுந்தரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.