வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தனலட்சுமி(வயது 52). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணனுக்கு காலில் அடிபட்டு உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் தனலட்சுமி காணப்பட்டார். இந்நிலையில் கல்லாற்றங்கரை அருகே தனலட்சுமி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், தனலட்சுமி அரளி விதையை(விஷம்) அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.