தீயில் கருகி பெண் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே தீயில் கருகிய பெண் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-12-01 19:04 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே அலங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி அஞ்சலை (வயது 48). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அஞ்சலை மீது தீ பரவி எரிந்தது. இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஞ்சலியின் மகள் ஆஷா அளித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்