5 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

5 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-29 20:00 GMT

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் அருகே கழிவு நீரேற்றும் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளதுரை தலைமையிலான போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் கட்டை பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ 300 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அவர் ஆந்திர மாநிலம் ராயபுரம் இந்தூர் காலனியை சேர்ந்த லோகேஷ்வர பிரசாத் மனைவி சலபக்கா பத்மஸ்ரீ (வயது 32) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த, கஞ்சா, செல்போன், ஏ.டி.எம்.கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி மதுரையில் சிலரிடம் விற்க வந்துள்ளார். அவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார்? மதுரையில் உள்ள கூட்டாளிகள் யார்?என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்