மணி பர்சை திருடிய பெண் கைது

மணி பர்சை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-26 00:15 IST

நயினார் கோவில் அருகே உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் மனைவி தமிழரசி (வயது 47). இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்து விட்டு அரண்மனை பகுதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி ஊருக்கு செல்ல முயன்றார். அப்போது பெண் ஒருவர் தமிழரசி பையில் வைத்திருந்த மணி பர்சை எடுத்துக்கொண்டு ஓட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழரசி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் தஞ்சாவூர் வண்டிக்கார தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி செல்லாயி (57) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்