ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது

பாளைளயங்கோட்டையில் ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-10-21 19:50 GMT

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் புலமாடன். இவருடைய மனைவி ஆறுமுகசெல்வி. இவர் நேற்று மதியம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் இருந்து சமாதானபுரம் செல்வதற்காக மினி பஸ்சில் புறப்பட்டார். அப்போது அவர் வைத்திருந்த மணி பர்சை மர்ம நபர் திருடியுள்ளார்.

இதனை அறிந்த பயணிகள் பஸ்சில் சந்தேகப்படும்படியாக இருந்த பெண் ஒருவரை பிடித்து பாளையங்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் முத்துநகரை சேர்ந்த முகேஷ் மனைவி இசக்கியம்மாள் (வயது 43) என்பதும், ஆறுமுகசெல்வியிடம் மணிப்பர்சை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்