பேராசிரியை வீட்டில் நகை திருடிய பெண் கைது

போடியில் பேராசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-29 18:45 GMT

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியைச் சேர்ந்தவர் பிரேமா (வயது 43). இவர், கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந்தேதி இவரது வீட்டில் இருந்த 1½ பவுன் நகை திருடுபோனது. இதுகுறித்து பிரேமா போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை திருடியது பிரேமா வீட்டில் வேலை பார்த்த வசந்தா என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று வசந்தாவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்